< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
தெற்கு சூடானின் உள்நாட்டு பாதுகாப்புக்கு ரஷியா உதவும்: அதிபர் புதின் உறுதி
|30 Sept 2023 1:25 AM IST
தெற்கு சூடானின் உள்நாட்டு பாதுகாப்புக்கு ரஷியா உதவும் என அதிபர் புதின் உறுதியளித்துள்ளார்.
ஜூபா,
ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் கடந்த 2011-ம் ஆண்டு சூடானில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக பிரிந்தது. அதுமுதல் அங்கு அதிபர் சல்வா கீர் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதன்முறையாக அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் அதிபர் சல்வா கீர் ரஷியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தெற்கு சூடானின் உள்நாட்டு அரசியல் சூழ்நிலையை கையாளுதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ரஷியா உதவும் என புதின் கூறினார். மேலும் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.