< Back
உலக செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 5 பேர் பலி
உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 5 பேர் பலி

தினத்தந்தி
|
19 Aug 2023 4:58 PM IST

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 542வது நாளை எட்டியுள்ளது.

கீவ்,

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் இன்று 542வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நேற்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோனை மாஸ்கோவில் நிறுவப்பட்டுள்ள வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. ஆனாலும், டிரோன் மாஸ்கோவில் உள்ள வர்த்தக மையம் மீது மோதியது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ரஷியா தெரிவித்தது.

இந்நிலையில், டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் மீது ரஷியா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் செர்னிகிவ் நகர் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தியேட்டர் மற்றும் பல்கலைக்கழகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 37 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் செய்திகள்