உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதல்- 5 பேர் பலி; 130க்கும் மேற்பட்டோர் காயம்
|ரஷிய ஏவுகணைகள், உக்ரைனின் வான்பாதுகாப்பு தளவாடங்களை மீறி கீவ், கார்கீவ் நகரங்களின் மீது பயங்கரமாக வெடித்து சிதறின.
கீவ்,
ரஷியா-உக்ரைன் போரில் சமீப காலமாக இருநாடுகளும் தங்களுடைய தாக்குதல் திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில் நேற்று உக்ரைனின் கீவ், கார்கீவ் நகரங்களை நோக்கி ரஷிய போர் விமானங்கள் ஊடுருவின.
ரஷியா தனது ஆயுத கிட்டங்கில் பலம் வாய்ந்த கின்சால் ஏவுகணைகள், உக்ரைன் நகரங்கள் மீது குறிவைத்து சரமாரியாக வீசப்பட்டன.
ரஷியா தன்னிடம் உள்ள பலம் வாய்ந்த கின்சால் ஏவுகணைகளை, உக்ரைன் நகரங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஒலியை விட 10 மடங்கு வேகத்துடன் பயணிக்கும் இந்த ஏவுகணைகள், உக்ரைனின் வான்பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றிக்கொண்டு கீவ், கார்கீவ் நகரங்களின் மீது பயங்கரமாக வெடித்து சிதறின.
இந்த தாக்குதலில் வானுயர கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து நொறுங்கின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. 130-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில் ரஷியாவின் பெல்கோரட் பகுதி நோக்கி டிரோன் படையை உக்ரைன் அனுப்பியது. இருப்பினும் அதனை ரஷிய ராணுவத்தின் வான்பாதுகாப்பு தளவாடங்கள் சுட்டு வீழ்த்தி உள்ளன.
Kh-47M2 Kinzhal என்பது வான்வழி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும், இது அதன் விலை மற்றும் குறைந்த இருப்பு காரணமாக ரஷியப் படைகளால் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. நேற்று சுடப்பட்ட ஏவுகணைகள், போர் தொடங்கியதிலிருந்து ஒரு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும் என்று உக்ரைன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறினார்.