< Back
உலக செய்திகள்
புதினின் ரகசிய அரண்மனையை குறிவைத்த உக்ரைன் டிரோன்
உலக செய்திகள்

புதினின் ரகசிய அரண்மனையை குறிவைத்த உக்ரைன் டிரோன்

தினத்தந்தி
|
6 Sept 2023 9:57 AM IST

புதினின் ரகசிய மாளிகை மீதே டிரோன் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது உக்ரைன்.

மாஸ்கோ,

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 550 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ரகசிய அரண்மனை மீது தாக்குதல் நடத்த முயற்சித்த உக்ரைனின் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷிய அதிபர்கள் வேட்டைக்குச் சென்று, பின் விருந்தினர்களுக்கு விருந்துவைக்கும் ரகசிய மாளிகை ஒன்று ஜாவிடோவா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த ரகசிய மாளிகை மீதே டிரோன் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது உக்ரைன். இவ்வாறு சுட்டுவீழ்த்தப்பட்ட டிரோன் எரிபொருள் கிடங்கின் மீது விழுந்து வெடித்து சிதறியுள்ளது.

வாக்னர் படைத்தலைவர் பிரிகோஜின் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளான பகுதியிலேயே இந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்