< Back
உலக செய்திகள்
அபராதத்தை செலுத்த தவறிய கூகுள் நிறுவனத்திற்கு மேலும் ரூ.381 கோடி அபராதம் விதித்த ரஷியா
உலக செய்திகள்

அபராதத்தை செலுத்த தவறிய கூகுள் நிறுவனத்திற்கு மேலும் ரூ.381 கோடி அபராதம் விதித்த ரஷியா

தினத்தந்தி
|
28 Jun 2023 11:29 PM IST

ரஷியாவில் கூகுள் நிறுவனத்திற்கு மேலும் ரூ.381 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ,

ரஷிய அரசாங்கம் கடந்த பிப்ரவரி 2022-ல் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'ஆல்ஃபபெட்' நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபில்கள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.190 கோடி) அபராதம் விதித்திருந்தது. ரஷியாவின் பெடரல் ஆன்டிமோனோபோலி சர்வீஸ் (FAS) எனும் அமைப்பு கூகுள், யூ-டியூப் வீடியோ ஹோஸ்டிங் சேவை சந்தையில் அதன் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்தியது என்று குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அபராத தொகையை குறிப்பிட்ட காலத்தில் செலுத்த தவறியதால் கூகுள் நிறுவனத்திற்கு மேலும் 4 பில்லியன் ரூபில்கள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.381 கோடி) அபராதம் விதிக்கப்படுவதாக ரஷியாவின் பெடரல் ஆன்டிமோனோபோலி சர்வீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு மார்ச் 2022-ல் ரஷ்யாவில் ஆன்லைன் விளம்பரங்களை விற்பனை செய்வதை கூகுள் நிறுத்தியது. ஆனால் சில இலவச சேவைகளை மட்டும் கிடைக்கச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்