< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய நபருக்கு எதிராக தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதித்திட்டம்: ஐ.எஸ் பயங்கரவாதி ரஷியாவில் கைது!
|22 Aug 2022 1:58 PM IST
கைதான அந்த நபர் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய நபருக்கு எதிராக தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.
மாஸ்கோ,
இந்தியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ஐஎஸ் தற்கொலைப்படை பயங்கரவாதியை ரஷியா கைது செய்துள்ளது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
இந்தியாவின் தலைமை உயர்பதவி வகிக்கும் முக்கிய மனிதருக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ் பயங்கரவாத குழுவை சேர்ந்த ஒரு நபரை ரஷிய அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
கைதான அந்த நபர் இந்தியாவின் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய மனிதருக்கு எதிராக தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது என ரஷிய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (எப் எஸ் பி) தெரிவித்துள்ளது.
அந்த நபர் துருக்கியில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத குழுவின் தலைவர்களில் ஒருவரால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தேர்வு செய்யப்பட்ட நபர் ஆவார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.