< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
'ஜி-20' மாநாட்டிற்காக இந்தோனேசியா சென்ற ரஷிய வெளியுறவு மந்திரிக்கு திடீர் உடல் நலக்குறைவு
|15 Nov 2022 5:15 AM IST
‘ஜி-20’ அமைப்பில் உறுப்பு நாடாக இருக்கும் ரஷியாவின் அதிபர் புதின் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.
பாலி,
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஜலன் நுசா துவாவில் 'ஜி-20' அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. எனினும் 'ஜி-20' அமைப்பில் உறுப்பு நாடாக இருக்கும் ரஷியாவின் அதிபர் புதின் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் ரஷியாவின் சார்பாக அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மாநாட்டில் பங்கேற்பதற்காக செர்ஜி லாவ்ரோவ் நேற்று இந்தோனேசியா சென்றார். மாநாடு நடைபெறும் ஜலன் நுசா துவா நகருக்கு சென்றபோது அவருக்கு திடீர் உடல் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவர் நலமாக இருப்பதை உறுதி செய்தனர். அதைதொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டு சென்றார்.