< Back
உலக செய்திகள்
ரஷிய கடற்படை தலைமையகத்தில் டிரோன் தாக்குதல் - 6 பேர் படுகாயம்
உலக செய்திகள்

ரஷிய கடற்படை தலைமையகத்தில் 'டிரோன்' தாக்குதல் - 6 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
1 Aug 2022 2:54 AM IST

ரஷிய கடற்படை தலைமையகத்தில் நடத்தப்பட்ட ‘டிரோன்’ தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

மாஸ்கோ,

உக்ரைன்-ரஷியா போர் 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷியாவின் கருங்கடல் கடற்படை முக்கிய பங்கு வகித்து வருகிறது. கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷிய போர்க்கப்பல்கள் உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றன.

கடந்த 2014-ம் ஆண்டு ரஷியாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தில் உள்ள செவஸ்டோபோல் நகரில் ரஷிய கருங்கடல் கடற்படையின் தலைமையகம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை இந்த கடற்படை தலைமையகம் மீது 'டிரோன்' தாக்குதல் நடத்தப்பட்டது. டிரோன் மூலம் குண்டு வீசப்பட்டதில் 6 பேர் படுகாயம் அடைந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயம் இதுபற்றிய கூடுதல் தகவல்களை வழங்க அவர்கள் மறுத்துவிட்டனர். ரஷியாவில் நேற்று கடற்படை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்