< Back
உலக செய்திகள்
ஈரான் அதிபர் பதவிக்கான 2-ம் கட்ட தேர்தல்

Image Courtesy : AFP

உலக செய்திகள்

ஈரான் அதிபர் பதவிக்கான 2-ம் கட்ட தேர்தல்

தினத்தந்தி
|
29 Jun 2024 4:12 PM IST

ஈரான் அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக 2-ம் கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது.

டெஹ்ரான்,

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, கடந்த மாதம் 19-ந்தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஈரானின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் மொத்தம் 2.45 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மசூத் பெசெஸ்கியன் 1.4 கோடி வாக்குகளை பெற்றுள்ளார். அதே சமயம் சயீது ஜலீலி 90.4 லட்சம் வாக்குகளையும், முகமது பாகேர் 30.3 லட்சம் வாக்குகளையும், முஸ்தபா போர்முகமதி 2.06 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்த முடிவுகளின்படி மசூத் பெசெஸ்கியன் அதிகபட்ச வாக்குகளை பெற்றிருந்தாலும், ஈரான் நாட்டின் சட்டத்தின்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெற ஒட்டுமொத்த வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டியது கட்டாயமாகும்.

அவ்வாறு பெறாவிட்டால், முதல் இரண்டு இடங்களில் உள்ள வேட்பாளர்களுக்கு இடையே 2-ம் கட்ட தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில், தற்போது அதிகபட்ச வாக்குகளைப் பெற்று முதல் இரண்டு இடங்களில் இருக்கும் வேட்பாளர்கள் மசூத் பெசெஸ்கியன் மற்றும் சயீது ஜலீலி ஆகிய இருவருக்கும் இடையே அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஈரானின் வரலாற்றில் இதற்கு முன்பு கடந்த 2005-ம் ஆண்டில் மட்டுமே இதுபோல் 2-ம் கட்ட அதிபர் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்