< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
2,777-வது பிறந்த நாள் கொண்டாடிய ரோம் நகரம்
|23 April 2024 4:36 AM IST
ரோம் நகரத்தின் 2,777-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.
ரோம்,
இத்தாலியின் தலைநகரமான ரோம் நகரத்தின் 2,777-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அங்கு இசைக்கச்சேரி, கண்காட்சி என ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட அணிவகுப்பும் நடைபெற்றது.
இதில் பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு உற்சாகமாக நடனம் ஆடினர். இதனால் நகரமெங்கும் விழாக்கோலம் பூண்டது. ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அங்கு சென்று இதனை கண்டுகளித்தனர்.