< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சிரியாவில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈராக் ராக்கெட் வீசி தாக்குதல்
|22 April 2024 2:26 PM IST
ஈராக் பிரதமரை ஜோ பைடன் சந்தித்த மறுநாள் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டமாஸ்கஸ்,
சிரியாவில் உள்ள ராணுவ தளம் மீது ஈராக் 5 ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈராக் பிரதமர் முகமது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த அடுத்த நாள் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈராக்கின் ஜும்மார் நகரில் இருந்து வடகிழக்கு சிரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை நோக்கி ராக்கெட்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுதானி அமெரிக்காவுக்கு சென்று வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்த அடுத்த நாள் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. சிரியா எல்லையில் இருந்து தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக என ஈராக் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.