< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பாரிஸ் நகரில் மெட்ரோ பழுது பணிகளில் ஈடுபடும் 'ரோபோ நாய்'
|20 April 2023 10:06 PM IST
பாரிசில் மெட்ரோ பழுது பணிகளில் ‘ரோபோ நாய்’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பாரிஸ்,
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் மெட்ரோ பழுது பணிகளில் 'ரோபோ நாய்' ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ நாய்க்கு 'பெர்சிவல்' (Perceval) என பெயரிடப்பட்டுள்ளது. இது 40 கிலோ எடையும், 3 அடி உயரமும் கொண்டுள்ளது.
நாய்களைப் போன்றே 4 கால்களில் நடந்து செல்லக்கூடிய வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோ நாய், மனிதர்களால் செல்ல முடியாத கடினமான பகுதிகளுக்குள் நுழைந்து பழுது பணிகளை மேற்கொள்கிறது.
இதே போல் அண்மையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், காவல் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக டிஜிடாக் (Digidog) என்ற ரோபோ நாயை நியூயார்க் நகர காவல்துறை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.