< Back
உலக செய்திகள்
நியூயார்க் நகர காவல் பணியில் இணைந்த ரோபோ நாய்
உலக செய்திகள்

நியூயார்க் நகர காவல் பணியில் இணைந்த 'ரோபோ நாய்'

தினத்தந்தி
|
13 April 2023 11:02 PM IST

நியூயார்க் காவல்துறையினர் ரோபோ நாய் ஒன்றை காவல் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

வாஷிங்டன்,

சுமார் 88 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூயார்க் நகரில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 26 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 433 கொலை குற்றங்கள் நடந்துள்ளன.

நியூயார்க் நகர காவல்துறையில் 36 ஆயிரம் காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், குற்றங்களை தடுக்க நவீன வழிமுறைகளை அந்நகர காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது டிஜிடாக்(Digidog) என்ற ரோபோ நாய் ஒன்றை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இந்த ரோபோ நாய் ரிமோட் கண்ட்ரோல் முறையில் இயக்கப்படுகிறது. சுரங்க நடைபாதைகள், ஆபத்தான பகுதிகள், கட்டுமானம் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ரோபோ நாய் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

ஆபத்தில் சிக்கும் மனிதர்களுக்கு உதவி செய்யும் திறன் கொண்ட இந்த ரோபோ நாயிடம் மனிதர்கள் தொடர்பு கொள்ள முடியும். மேலும் தப்பிச் செல்லும் கார்களில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தும் எந்திரத்தையும் நியூயார்க் காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.


மேலும் செய்திகள்