சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு
|சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
பீஜிங்,
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிப்பதாக நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் தனது ஆய்வறிக்கையில் கூறி உள்ளது.
இது கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட சுமார் இரு மடங்கு அதிகம் ஆகும். இதற்கு அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதில் ஒன்று கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதது. மற்றொன்று ஒரே குழந்தை திட்டம். இது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே அரசால் கைவிடப்பட்டாலும் அதன் தாக்கம் மக்களிடம் இன்னும் உள்ளது.
சீனாவில் ஏற்பட்டுள்ள இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் உலகளாவிய வினியோக சங்கிலியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மற்ற நாடுகளின் வெற்றிகரமான முயற்சிகளில் இருந்து சீனா உரிய முடிவை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.