< Back
உலக செய்திகள்
இலங்கையில் வரி விகிதங்கள் உயர்வு - ரணில் விக்கிரமசிங்கே நடவடிக்கை
உலக செய்திகள்

இலங்கையில் வரி விகிதங்கள் உயர்வு - ரணில் விக்கிரமசிங்கே நடவடிக்கை

தினத்தந்தி
|
3 Jun 2022 3:33 PM IST

இலங்கையில் வாட் வரி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

பொருளாதார நெருக்கடி மற்றும் அதீத கடன் சுமையை சந்தித்து வரும் இலங்கையில் விலைவாசி உயர்வு விகிதம் கடந்த ஏப்ரலில் 29.8 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதம் 39.1 சதவீதமாக அதிகரித்தது. இதனை சமாளிக்க வரி விகிதங்களை உயர்த்தி இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி இலங்கையில் வாட் வரி விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,500 கோடி இலங்கை ரூபாய் அளவுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1-ந்தேதி முதல், கார்ப்பரேட் வரி விகிதம் 24 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 5,200 கோடி இலங்கை ரூபாய் அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டின் இறுதியில் அன்றைய இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, வாட் வரி மற்றும் கார்ப்பரேட் வரிகளை வெகுவாக குறைத்தார். இதனால் 80 ஆயிரம் கோடி இலங்கை ரூபாய் அளவுக்கு வரி இழப்பு ஏற்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்