< Back
உலக செய்திகள்
குரல் பதிவு மூலம் கொரோனாவை துல்லியமாக கண்டறியும் செல்போன் செயலி; விஞ்ஞானிகள் சாதனை

Image Courtesy: AFP

உலக செய்திகள்

குரல் பதிவு மூலம் கொரோனாவை துல்லியமாக கண்டறியும் செல்போன் செயலி; விஞ்ஞானிகள் சாதனை

தினத்தந்தி
|
6 Sept 2022 12:43 AM IST

உலக நாடுகளில் இருந்து கொரோனா தொற்று இன்னும் நீங்காத நிலையில், இந்த தொற்றை எளிமையாக கண்டறிய செல்போன் செயலி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த செயலி நோயாளிகளின் குரல் பதிவு மூலம் தொற்றை உறுதி செய்யும். அதாவது குறிப்பிட்ட நபரின் மருத்துவ வரலாறு, புகைபிடிக்கும் நிலை போன்ற சில அடிப்படை தகவல்களை பதிவு செய்து, பின்னர் அவர்களின் சில சுவாச ஒலிகளையும் பதிவு செய்ய வேண்டும்.

அதன்படி மூன்று முறை இருமல், மூன்று முதல் ஐந்து முறை வாய் வழியாக ஆழமாக சுவாசித்தல் மற்றும் திரையில் ஒரு சிறிய வாக்கியத்தை மூன்று முறை வாசிப்பது ஆகியவை இதில் அடங்கும். இவற்றின் மூலம் குறிப்பிட்ட அந்த நபருக்கு தொற்று இருக்கிறதா? என்பதை துல்லியமாக இந்த செயலி தெரிவிக்கும் என நெதர்லாந்தை ேசர்ந்த ஆய்வாளர் வபா அல்பவி தெரிவித்தார்.

இந்த செயலி 89 சதவீதம் அளவுக்கு துல்லியமாக முடிவை காட்டும் என தெரிவித்த விஞ்ஞானிகள், பிற பரிசோதனை முறைகளை ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது என்றும், குறைவான வருவாய் கொண்ட நாடுகளில் இவற்றை எளிதாக பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்