ஸ்வீடனில் இருந்து ஏவப்பட்ட ஆராய்ச்சி ராக்கெட் தவறுதலாக நார்வேயில் தரையிறங்கியதால் பரபரப்பு
|நார்வேயில் தரையிறங்கிய ஆராய்ச்சி ராக்கெட்டில் உள்ள முக்கிய கருவிகளை மீட்டெடுக்கும் பணி நடந்து வருகிறது.
ஸ்டாக்ஹோம்,
வடக்கு ஸ்வீடனில் உள்ள எஸ்ரேஞ்ச் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த திங்கள்கிழமை அதிகாலை ஸ்வீடன் ஸ்பேஸ் கார்ப் ஏவப்பட்ட ஆராய்ச்சி ராக்கெட் திடீரென பழுதடைந்து அண்டை நாடான நார்வேயில் 15 கிமீ (9.32 மைல்) தொலைவில் தரையிறங்கியது.
பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் நடத்திய சோதனையில் ராக்கெட் 250 கிமீ உயரத்தை எட்டியதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இந்த ஆராய்ச்சி ராக்கெட் மலைகளில் 1,000 மீட்டர் உயரத்திலும், அருகிலுள்ள குடியேற்றத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் தரையிறங்கியதாக ஸ்வீடனர் ஸ்பேஸ் கார்பின் தகவல் தொடர்புத் தலைவர் பிலிப் ஓல்சன் தெரிவித்துள்ளார்.
நார்வேயில் தரையிறங்கிய ஆராய்ச்சி ராக்கெட்டில் உள்ள முக்கிய கருவிகளை மீட்டெடுக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், ராக்கெட் தவறான பாதையை அடைந்ததற்கு பின்னால் உள்ள தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.