< Back
உலக செய்திகள்
அரிசி ஏற்றுமதி தடையில் இருந்து சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்க இந்திய அரசிடம் கோரிக்கை
உலக செய்திகள்

அரிசி ஏற்றுமதி தடையில் இருந்து சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்க இந்திய அரசிடம் கோரிக்கை

தினத்தந்தி
|
29 July 2023 12:32 AM IST

அரிசி ஏற்றுமதி தடையில் இருந்து விலக்கு அளிக்க இந்திய அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்,

உள்நாட்டில் வினியோகத்தை அதிகரித்து விலையை கட்டுப்படுத்துவதற்காக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த 20-ந் தேதி தடை விதித்தது. இது பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் சிங்கப்பூர் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே தங்களுக்கு விலக்கு அளிக்குமாறு அந்த நாடு கோரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பாக சிங்கப்பூர் உணவு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பல்வேறு வகையான அரிசிகளை பல்வேறு வழிகள் மூலம் இறக்குமதி செய்வதற்காக இறக்குமதியாளர்களுடன் சிங்கப்பூர் உணவு கழகம் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதைப்போல அரிசி ஏற்றுமதி தடையில் இருந்து சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்குமாறு இந்திய அதிகாரிகளுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது' என குறிப்பிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்