< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
லிபியாவில் இருந்து வங்கதேசம் திரும்பிய அகதிகள்
|14 Jun 2024 2:45 AM IST
வங்கதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் லிபியாவில் அகதிகளாக உள்ளனர்.
திரிபோலி,
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஏராளமானோர் அங்கிருந்து கடல் வழியாக சென்று ஐரோப்பிய நாடுகளில் குடியேறுகின்றனர். இந்தநிலையில் வங்கதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் லிபியாவில் அகதிகளாக உள்ளனர். எனவே தங்களை மீட்க கோரி அவர்கள் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பிடம் கோரிக்கை விடுத்தனர்.
எனவே அவர்களை மீட்பதற்கான முயற்சி நடைபெற்று வந்தது. அதன்படி லிபியாவில் தங்கி இருந்த 163 அகதிகள் சிறப்பு விமானம் மூலம் வங்கதேசம் திரும்பினர். இந்த அமைப்பானது இதுவரை லிபியாவில் தங்கி இருந்த சுமார் 80 ஆயிரம் அகதிகள் தங்களது தாயகம் திரும்ப உதவி செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.