< Back
உலக செய்திகள்
சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 8 பேர் பலி
உலக செய்திகள்

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 8 பேர் பலி

தினத்தந்தி
|
1 Jan 2024 1:03 PM IST

சிரியாவில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

டமாஸ்கஸ்,

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

அதேபோல், சிரியாவில் பஷிர் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அவரது ஆட்சிக்கு ஈரான் அரசு ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள், ஆயுதக்குழுக்கள் சிரியா, ஏமன், லெபனான் போன்ற நாடுகளில் இருந்தவாறு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், சிரியாவின் அலிப்போ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 5 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்