< Back
உலக செய்திகள்
காங்கோவில் பொதுமக்கள் 17 பேரை கொன்ற கிளர்ச்சியாளர்கள்
உலக செய்திகள்

காங்கோவில் பொதுமக்கள் 17 பேரை கொன்ற கிளர்ச்சியாளர்கள்

தினத்தந்தி
|
27 March 2023 11:43 PM IST

கிழக்கு காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கின்ஷாசா,

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. அதேவேளை காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் காங்கோ பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கோவின் கிழக்கு இடுரி மற்றும் ட்ஜிகு மாகாணங்களில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த மாகாணங்களில் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியது. இந்த சம்பவத்தில் அந்த வாகனங்களில் பயணம் செய்த ஒட்டுநர் உள்பட பொதுமக்கள் 17 பேர் கிளர்ச்சியாளர்கள் குழுவால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தாக்குதல் நடந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்