< Back
உலக செய்திகள்
போருக்கு தயாராக இருக்கிறோம் - போலந்து அதிரடி அறிவிப்பு
உலக செய்திகள்

'போருக்கு தயாராக இருக்கிறோம்' - போலந்து அதிரடி அறிவிப்பு

தினத்தந்தி
|
6 Feb 2024 8:25 PM IST

போர் அச்சுறுத்தலுக்குத் தயாராகும் நடவடிக்கைகளை போலந்து ராணுவம் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்தார்.

வார்சா,

போலந்து பாதுகாப்பு மந்திரி விளாடிசா கோனேக் காமிஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் உக்ரைன் -ரஷியா இடையிலா போர் சூழலில் போலந்து மீதான போர் அச்சுறுத்தலுக்கு வாய்ப்பு உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

"அனைத்து வகையான சூழ்நிலைகளையும் நான் எதிர்பார்க்கிறேன். அதில் மோசமானவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். இன்று நாம் இருக்கும் சூழ்நிலையில் ஒரு பாதுகாப்பு மந்திரியின் பணி அதுதான். நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம்.

இதனை வெறும் பேச்சுக்காக நான் சொல்லவில்லை. போலந்து ராணுவம் போர் அச்சுறுத்தலுக்குத் தயாராகும் உறுதியான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளது. பெரிய அளவிலான ஆயுதக் கொள்முதல் மிகவும் முக்கியமானது என்றாலும், ஒவ்வொரு ராணுவ வீரருக்கான தனிப்பட்ட உபகரணங்களையும் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்