< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் உள்ள அதிநவீன கடற்படை சோதனை தளத்தை பார்வையிட்ட ராஜ்நாத் சிங்
|25 Aug 2024 9:49 PM IST
அமெரிக்காவில் உள்ள அதிநவீன கடற்படை சோதனை தளத்தை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
வாஷிங்டன்,
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக டென்னசி மாகாணம் மெம்பிஸ் பகுதியில் உள்ள அதிநவீன கடற்படை சோதனை தளத்திற்கு ராஜ்நாத் சிங் சென்றார்.
அங்கு மிகப்பெரிய நீர் சுரங்கப்பாதை வசதி மூலம் நீர்மூழ்கிக் கப்பல்கள், டார்பிடோக்கள் சோதிக்கப்படுகின்றன. அங்கு நடைபெறும் சோதனைகள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் அமெரிக்க அதிகாரிகள் விளக்கினர். இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இதேபோன்ற வசதியை நிறுவுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.