மழை, வெள்ள பாதிப்பு: துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
|துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
துபாய்,
துபாயில் வரலாறு காணாத கனமழை பெய்து உள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்டவை ஏற்பட்டு உள்ளது. வீடுகள், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. கனமழையால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன், விமான சேவையும் பாதிப்படைந்தது.
வாகனங்கள் வழியிலேயே நீரில் மூழ்கின. கார், லாரி உள்ளிட்ட சிறிய பெரிய வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சிகளும் வீடியோவாக வெளிவந்தன. பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வழியே நீர் உள்ளே புகுந்தது. மழை காரணமாக துபாயில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துபாயில் வசிக்கும் இந்தியர்கள், +971501205172, +971569950590, +971507347676, +971585754213 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்க ஐக்கிய அரபு அமீரக அரசுடன் இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.