< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
லண்டனில் உள்ள மகாத்மா காந்தி, குரு பசவன்னா சிலைகளுக்கு ராகுல் காந்தி மரியாதை
|5 March 2023 10:44 PM IST
லண்டனில் உள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் குரு பசவன்னா சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
லண்டன்,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
நேற்றைய தினம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களுடன், '21-ம் நூற்றாண்டில் கவனிப்பதற்கான பயிற்சியில்' என்ற தலைப்பில் ராகுல் காந்தி பேசினார். இந்நிலையில் இன்று லண்டனில் உள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் குரு பசவன்னா சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.