ராணி எலிசபெத் இறுதிச் சடங்கிற்கு ரூ.59 கோடி செலவு..!
|ராணியின் இறுதிச் சடங்கிற்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் அரசாட்சி நடத்தி வந்த ராணி எலிசபெத், தனது 96-வது வயதில் கடந்த 8-ந் தேதி தனக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார்.
அதையடுத்து வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில ராணியின் உடல், அங்குள்ள மேடையில் வைக்கப்பட்டது. அதுவும் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர்.
இதையடுத்து வரும் 19-ம் தேதி அன்று ராணியின் உடல் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு வருகை தரவுள்ளனர்.
இந்நிலையில் நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கைப் பாதுகாப்பது ஐக்கிய ராஜ்ஜிய வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஒற்றை நாள் நடவடிக்கையாகும், இதற்காக சுமார் 7.5 மில்லியன் அமெரிக்க லாடருக்கும் (இந்திய மதிப்பில் ரூ. 59 கோடி) அதிகமாக செலவாகும் என தெரிகிறது.
இங்கிலாந்தில் வரும் திங்களன்று (19ம் தேதி) நடைபெறும் இறுதிச் சடங்கில் இதுவரை எதிர்ப்பார்க்காத அளவில் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரிட்டிஷ் எம்ஐ5 மற்றும் எம்ஐ6 உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர காவல்துறை மற்றும் ரகசிய சேவை ஆகியவை இணைந்து செயல்படும். இங்கிலாந்து காவல் துறை இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும்.
மற்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது இது பெரும் செலவாகும் என கருதப்படுகிறது. கடந்த 2011ல் இளவரசர் மற்றும் வேல்ஸ் இளவரசர் திருமண செலவு அதிகமாக இருந்தது. ஆனால் இந்த பாதுகாப்பு செலவை ஒப்பிட முடியாது. வில்லியம் மற்றும் கேட்டின் 2011 திருமணத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தது. திருமணத்திற்கான காவல்துறை செலவுகள் 7.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்படும் என்று முன்னாள் ராயல் பாதுகாப்பு அதிகாரியான சைமன் மோர்கன் தெரிவித்துள்ளார். சுமார் 7.5 லட்சம் பேர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.