< Back
உலக செய்திகள்
உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது - ஜெர்மனி, பிரான்ஸ்சிற்கு ரஷியா எச்சரிக்கை
உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது - ஜெர்மனி, பிரான்ஸ்சிற்கு ரஷியா எச்சரிக்கை

தினத்தந்தி
|
29 May 2022 11:26 PM IST

உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்று ஜெர்மனி, பிரான்ஸுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாஸ்கோ,

ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கிறோம். இதனால் நிலைமை மோசமாகும். மனிதாபிமான பிரச்சினைகள் அதிகரிக்கும். ரஷியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாகவே சர்வதேச அளவில் உணவு தானியங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

தடைகளை நீக்கினால் ரஷியாவில் இருந்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய தயாராக இருக்கிறோம். உக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக உணவு தானியங்களை அனுப்பவும் அனுமதிப்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்