அறிவியல் கண்காட்சி: ரோபோவுடன் கைகுலுக்கிய புதின்
|சீனா-ரஷியா சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் புதின் கலந்து கொண்டார்.
பீஜிங்,
ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ள நிலையில் சீன அதிபர் ஜின்பிங் அவரை உற்சாகமாக வரவேற்றார். சுற்றுப்பயணத்தின் முதல்நாளில் பீஜிங்கில் நடந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளில் பெரும் தலைவர்களும் கலந்து கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இந்தநிலையில் 2-ம் நாள் பயணமாக சீனாவின் வடக்கு மாகாணமான ஹெய்லாங்ஜியாங்கில் உள்ள ஹார்பின் நகருக்கு ரஷிய அதிபர் புதின் வருகை தந்தார்.
அங்கே அந்த மாகாணத்தின் உச்சத்தலைவர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் சீனா-ரஷியா சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் புதின் கலந்து கொண்டார். அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த மின்சார கார்கள், நவீன கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். அப்போது அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ரோபோவுடன் புதின் கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.