< Back
உலக செய்திகள்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் - ரஷிய அதிகாரிகளுக்கு புதின் அதிரடி உத்தரவு
உலக செய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் - ரஷிய அதிகாரிகளுக்கு புதின் அதிரடி உத்தரவு

தினத்தந்தி
|
4 Aug 2023 10:57 PM IST

உள்நாட்டு நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பது மிகவும் முக்கியமானது என்று புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ,

ரஷியாவின் மிகப்பெரும் தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, ரஷியாவில் உள்ள அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று புதின் தெரிவித்தார்.

அவ்வாறு செய்வதன் மூலம் ரஷிய தயாரிப்புகளை மேம்படுத்த முடியும் என்று அவர் கூறினார். மேலும் உள்நாட்டு நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பது மிகவும் முக்கியமானது என்றும், இதுவே வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் புதின் தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்