புதின் பயந்து போய் விட்டார்; எங்காவது பதுங்கி இருக்கலாம்: ஜெலன்ஸ்கி
|வாக்னர் அமைப்பால் புதின் பயந்து போய், எங்காவது பதுங்கி இருக்கலாம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது உரையில் கூறியுள்ளார்.
கீவ்,
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் தினசரி உரையாற்றி வருகிறார். அவர் ரஷியாவில் வாக்னர் அமைப்பின் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களை பற்றி இன்று கூறும்போது, விளாடிமிர் புதின் இந்த அச்சுறுத்தலை அவராகவே உருகாக்கி கொண்டார் என கூறியுள்ளார்.
ரஷிய அதிபர் புதின் மிகவும் பயந்து போய் விட்டார் என கூறிய ஜெலன்ஸ்கி, மாஸ்கோ நகரில் வாக்னர் கூலிப்படையினர் முன்னேறி வரும் சூழலில், புதின் எங்காவது சென்று பதுங்கி இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
2021-ம் ஆண்டு இந்த உலகை ரஷிய தலைவர் எப்படி அச்சுறுத்தினார்? என நாம் அனைவரும் நினைவுகூர வேண்டும். அவர் சில இறுதி எச்சரிக்கைகளை வைத்திருந்ததுடன், ஒரு வகையான வலிமையை வெளிக்காட்ட முயன்றார். ஆனால் 2022-ம் ஆண்டு, அவர் குழம்பி போய் விட்டார் என காட்டியது.
கிரெம்ளின் மாளிகையில் உள்ள அவர்கள் எந்த வகையான பயங்கரவாதம், எந்த வகையான முட்டாள்தனம் ஆகியவற்றை செய்ய திறன் படைத்தவர்களாகவும் உள்ளனர். ஆனால், ஒன்றை செய்ய வைக்க கூடிய தேவையான ஆற்றலை ஒரு சதவீதம் கூட அவர்களால் வழங்க முடியவில்லை. அவர்களே பிரச்சனையாகவும் உள்ளனர் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.