< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆத்திரமூட்டிய அமெரிக்கா... 48 மணி நேரத்திற்குள் அலற வைத்த கிம் ஜாங் உன்
|20 Feb 2023 10:32 PM IST
வடகொரியா வெறும் 48 மணி நேரத்திற்குள்ளாக கண்டம் விட்டு கண்டம் பாயும் 2வது ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது
சியோல்,
வடகொரியா வெறும் 48 மணி நேரத்திற்குள்ளாக கண்டம் விட்டு கண்டம் பாயும் 2வது ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
தென்கொரியா அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டது. இதனால் கோபம் அடைந்த வடகொரியா ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது.
ஆனால் அடுத்த 48 மனி நேரத்திற்குள் 2வது பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையும் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜப்பான் கடலை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் பிரதமர் அலுவலகமும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது..