< Back
உலக செய்திகள்
காமெடி நிகழ்ச்சியில் சீன ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு - தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.16 கோடி அபராதம்
உலக செய்திகள்

காமெடி நிகழ்ச்சியில் சீன ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு - தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.16 கோடி அபராதம்

தினத்தந்தி
|
19 May 2023 5:21 AM IST

சீனாவில் பிரபல காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.16 கோடி அபராதம் விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

பீஜிங்,

சீன தலைநகர் பீஜிங்கில் சியாகுவோ என்ற காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார். அப்போது அவர் சீன ராணுவம் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நிகழ்ச்சியை நடத்திய சியாகுவோ நிறுவனத்துக்கு சுமார் ரூ.16 கோடி அபராதம் விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது.

இதற்கிடையே இந்த தவறுக்கு மன்னிப்பு கோரிய லீ ஹாவ்ஷி தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்த போவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அனைத்து நிகழ்ச்சிகளில் இருந்தும் அவரை சஸ்பெண்ட் செய்ததாக சியாகுவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் `இது காமெடியை மேலும் ஒடுக்க வழிவகுக்கும்' என கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்