ஜப்பான் முன்னாள் பிரதமர்களுடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு
|ஜப்பான் முன்னாள் பிரதமர்களை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
டோக்கியோ,
இந்தியா, அமெரிக்கா, அஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் ஒன்றினைந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாகியுள்ளன. இந்த குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று நடைபெற உள்ளது.
இந்த உச்சிமாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்க உள்ளனர். குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்பது இது 2-வது முறையாகும். அதன்படி, இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டிற்கு முன்னதாக ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்களை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஜப்பானின் முன்னாள் பிரதமர்களான யோஷிஹைட் சுஹா, ஷின்சோ அபே மற்றும் யோஷிரொ மோரி ஆகியோரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.