< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்

போலந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

தினத்தந்தி
|
21 Aug 2024 10:55 PM IST

போலந்து பயணத்தை முடித்துக்கொண்டு 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி.

வார்சா,

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக போலந்து சென்றடைந்தார். அங்கு, அந்நாட்டின் அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து பேசும் பிரதமர் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடுகிறார்.

போலந்து-இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் 1979ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் போலந்து செல்லும் முதல் பிரதமர் என்கிற பெருமையை இந்த பயணத்தின் மூலம் நரேந்திர மோடி பெறுகிறார்.

இந்நிலையில், வர்ஸா நகர் சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போலந்து பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசுகிறார். போலந்தில் இருந்து உக்ரைனுக்கு பிரதமர் மோடி ரெயில் மூலம் செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

போலாந்தில் உள்ள இந்தியா வம்சாவளியினர் அன்பான வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்களின் ஆற்றல் நமது நாடுகளை பிணைக்கும் வலுவான உறவுகளாக உள்ளது என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்