< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜி7 மாநாடு - பிரதமர் மோடியை கைகுலுக்கி வரவேற்ற ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ்...!
|27 Jun 2022 4:49 PM IST
பெர்லின்,
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் மாநாடு நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான மாநாடு, ஜெர் மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று மாநாடு தொடங்கியது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில் ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனிக்கு சென்ற பிரதமர் மோடியை ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கால்ஸ் கைகுலுக்கி வரவேற்றார்.