< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
கத்தார் புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
|14 Feb 2024 11:28 PM IST
ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்து பிரதமர் மோடி கத்தார் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அபுதாபி,
2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அபுதாபியில் பிரமாண்ட சுவாமி நாராயணன் கோவிலை திறந்து வைத்தார். பின்னர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதையடுத்து 'கத்தார்' புறப்பட்டுச் சென்றார். அங்கு கத்தார் நாட்டு அதிபரை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு சமீபத்தில் கத்தாரில் நாட்டு அரசால் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 இந்தியர்கள் மத்திய அரசின் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.