< Back
உலக செய்திகள்
புரூனே மன்னருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
உலக செய்திகள்

புரூனே மன்னருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
4 Sept 2024 11:25 AM IST

புரூனே மன்னருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பந்தர் செரி பெகவான்,

இந்தியா - புரூனே இடையே தூதரக உறவு ஏற்பட்டு 40வது ஆண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று புரூனே நாட்டிற்கு சென்றார்.

புரூனே தலைநகர் பந்தர் செரி பெகவானுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்ததில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மோடி தான் தங்கும் ஓட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு காத்திருந்த இந்திய வம்சாவளியினர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், புரூனே மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியாவை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

புரூனே பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று மாலை சிங்கப்பூர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்