< Back
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் வாழும் இந்தியர்களை சந்தித்துப்பேசிய பிரதமர் மோடி டிரம் இசைத்து மகிழ்ந்தார்
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் வாழும் இந்தியர்களை சந்தித்துப்பேசிய பிரதமர் மோடி 'டிரம்' இசைத்து மகிழ்ந்தார்

தினத்தந்தி
|
16 Nov 2022 3:15 AM IST

இந்தோனேசியாவின் பாலித்தீவில் ‘ஜி-20’ நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று எத்தனையோ சந்திப்புகளை நடத்தினார்.

பாலி,

அவர் மனம் கவர்ந்த சந்திப்புகளில் முதல் இடம் பிடித்தது, அங்கு வாழ்கிற இந்திய மக்களை சந்தித்ததுதான் என்றால் அது மிகையல்ல.

அவரை சந்திப்பதற்காக இந்திய மக்கள் நமது பாரம்பரிய உடைகளிலும், தலைப்பாகைகள் அணிந்து கொண்டும் ஏராளமாக வந்திருந்தனர். அவர்கள் "பாரத மாதாவுக்கு ஜே" என்று ஆரவாரித்தனர்.

பிரதமர் மோடியை நோக்கி இரு கைகளைக் கூப்பி வணங்கினர். அவரும் புன்சிரிப்புடன் அவர்களது வணக்கத்தையும், வாழ்த்துகளையும் ஏற்றுக்கொண்டார். அவர்களோடு பிரதமர் மோடி இயல்பாக பேசி மகிழ்ந்தார்.

இந்த சந்திப்பு மேளதாளங்களுடன் திருவிழா கொண்டாட்டம் போல அமைந்தது. 'டிரம்' வாசித்தவர்களுடன் பிரதமர் மோடியும் சேர்ந்து சில வினாடிகள் 'டிரம்' இசைத்தார். இதைக்கண்ட அனைவரும் உற்சாகத்தில் மிதந்தனர்.

மேலும் செய்திகள்