< Back
உலக செய்திகள்
கொட்டும் மழையில் ராணுவ தளத்தில் அணிவகுப்பை ஏற்று கொண்ட பிரதமர் மோடி; வீடியோ வெளியீடு
உலக செய்திகள்

கொட்டும் மழையில் ராணுவ தளத்தில் அணிவகுப்பை ஏற்று கொண்ட பிரதமர் மோடி; வீடியோ வெளியீடு

தினத்தந்தி
|
22 Jun 2023 11:06 AM IST

அமெரிக்காவில் கொட்டும் மழையில் ராணுவ தளத்தில் இசை நிகழ்ச்சியுடன் கூடிய வரவேற்பை பிரதமர் மோடி ஏற்று கொண்டார்.

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அவர், நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து விமானம் மூலம் வாஷிங்டன் புறப்பட்டு சென்றார்.

பிரதமர் மோடிக்கு வாஷிங்டன் டி.சி. நகரில் ஆண்ட்ரூஸ் ராணுவ தளத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.

எனினும், அவரை வரவேற்பதற்காக சீருடை அணிந்த ராணுவ வீரர்களின் இசை குழுவினர் தயாராக இருந்தனர். அவர்கள், இசை கருவிகளை இசைத்து அளித்த பாரம்பரிய முறைப்படி அவரை வரவேற்றனர்.

கொட்டும் மழையிலும் பிரதமர் மோடி, ராணுவ வீரர்கள் அளித்த வரவேற்பை ஏற்று கொண்டார். இந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்