< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ரஷியா-சீனா அதிபர்கள் காணொலி காட்சி வாயிலாக நாளை பேச்சுவார்த்தை
|29 Dec 2022 6:48 PM IST
பிராந்திய அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ,
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இருவரும் காணொலி காட்சி வாயிலாக நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
உக்ரைனுடனான போர் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததோடு, ரஷியாவின் எரிபொருள் ஏற்றுமதியையும் தடை செய்தன. இந்த சூழலில் ரஷியாவிடம் இருந்து சீனா தற்போது அதிக அளவில் எரிபொருள் இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.