< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
நேபாள ஜனாதிபதிக்கு மூச்சுத்திணறல் - இந்தியாவில் சிகிச்சைக்கு பின் சொந்த நாடு திரும்பினார்...!
|1 May 2023 2:03 AM IST
நேபாள ஜனாதிபதிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் அவர் டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காத்மண்டு,
நேபாள ஜனாதிபதி ராம்சந்திர பாடெல். 78 வயதான இவருக்கு கடந்த 19-ம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராம்சந்திர பாடெல் உடல்நிலை சற்று சீரடைந்தது.
இதனை தொடர்ந்து, ராம்சந்திர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர், அவர் விமானம் மூலம் நேபாள தலைநகர் காத்மண்டு அழைத்து செல்லப்பட்டார். ராம்சந்திர் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் சில நாட்கள் ஒய்வு எடுக்க உள்ளதாக நேபாள ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.