< Back
உலக செய்திகள்
கத்தாரில் நடைபெற உள்ள 2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்
உலக செய்திகள்

கத்தாரில் நடைபெற உள்ள 2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

தினத்தந்தி
|
21 Sept 2022 10:24 PM IST

மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் முதல் முறையாக பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.

தோகா,

2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியை நடத்த கத்தார் வேகமாக தயாராகி வருவதாக பிபா உலகக்கோப்பை போட்டிக்கான உச்சிக்குழு பொதுச்செயலாளர் ஹசன் அல் தவாடி கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் முதல் முறையாக பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. மொத்தம் 8 விளையாட்டு அரங்கங்களில் 64 போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்து விளையாட்டு அரங்கங்களும் தலைநகர் தோகாவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளன். போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் மற்றும் ரசிகர்களின் பயண வசதிக்கேற்ப அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்