< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்

பூமியை தாக்கிய சூரிய புயல்: தொலைத்தொடர்பு, மின் விநியோகம் பாதிக்கும் அபாயம்

தினத்தந்தி
|
11 May 2024 1:15 PM IST

சூரிய புயல் காரணமாக, தொலைத்தொடர்பு, மின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாஷிங்டன்,

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், நேற்று சக்திவாய்ந்த சூரிய புயல் பூமியை தாக்கியது. இந்த சூரிய புயலை டாஸ்மானியா முதல் பிரிட்டன் வரை வானில் ஒளிக் காட்சிகளாக பார்க்க முடிந்தது.

இந்த சூரிய புயல் காரணமாக, தொலைத்தொடர்பு, மின் விநியோகம், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி செயற்கைக்கோள் ஆபரேட்டர்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சூரிய புயல் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு சுவீடனில் பலமான சூரிய புயல் தாக்கியது. இதன் பாதிப்பு காரணமாக தென்ஆப்பிரிக்காவில் மின் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்