பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
|தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்குட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது.
போர்ட் மோர்ஸ்பை,
பப்புவா நியூ கினியாவின் வடக்கே தொலைதூர பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்புந்தி பகுதியில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 32 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.
இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்ட தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
நிலநடுக்கத்திற்கான தாக்கம் அதிகம் ஏற்பட கூடிய பகுதியில் பப்புவா நியூ கினியா உள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்குட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் அது அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இதுபோன்று பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவாகி இருந்தது. இதில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.