< Back
உலக செய்திகள்
மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு

கோப்புப்படம் 

உலக செய்திகள்

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவு

தினத்தந்தி
|
20 Sept 2022 12:52 AM IST

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

மெக்சிகோ சிட்டி,

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள லா பிளாசிட்டா டி மோரேலோஸ் கடற்கரையில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் மைக்கோகன் மாநிலத்தில் உள்ள லா பிளாசிடா டு மார்லஸ்க்கு தென்கிழக்கே 46 கிலோமீட்டர் (29 மைல்) தொலைவில் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக மைக்கோகன் கடற்கரைக்கு அருகில் சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்