< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சாண்ட்வீச் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.2 ஆக பதிவு
|25 Oct 2022 9:35 AM IST
சாண்ட்வீச் தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்வீச் தீவில், அரசர் எட்வார்டு முனை பகுதியில் இருந்து 800 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.43 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் டுவிட்டரில் இன்று தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 139 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த தீவில் கோடை காலத்தில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் வந்து, செல்வது வழக்கம். இந்த தீவில் பயணிகள் விமானம் எதுவும் செல்லாத நிலையில், சொகுசு கப்பல் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.