< Back
உலக செய்திகள்
மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் உயிரிழப்பு
உலக செய்திகள்

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
20 Sept 2022 7:50 AM IST

மெக்சிகோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மெக்சிகோ சிட்டி,

வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கம் ரிக்டர் அளவு 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:05 மணிக்கு ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கோகன் மாகாணத்தின் எல்லைக்கு அருகில் 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது

இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அலறிஅடித்த்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகள்