< Back
உலக செய்திகள்
விமானத்தில்  ஒளிபரப்பான ஆபாச படம்: பயணிகள் அதிர்ச்சி
உலக செய்திகள்

விமானத்தில் ஒளிபரப்பான ஆபாச படம்: பயணிகள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
8 Oct 2024 4:59 AM IST

ஜப்பானில் விமானத்தில் உள்ள திரையில் திடீரென்று ஆபாச படம் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கான்பெரா,

ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து ஜப்பானின் ஹனேடா நகருக்கு கியூ.எப்-59 என்ற விமானம் புறப்பட்டது. குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் தங்களது இருக்கை முன்பு உள்ள குட்டித்திரையில் பயணிகள் படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அங்குள்ள அனைத்து திரைகளிலும் ஒரேநேரத்தில் ஆபாச படம் ஒளிபரப்பானது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அதனை மாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் வேறு படத்துக்கு மாற்றவோ, அணைக்கவோ முடியவில்லை.

இந்த சம்பவத்தால் குடும்பத்துடன் சென்றிருந்த பயணிகள் மிகவும் தர்ம சங்கடத்துக்குள்ளாகினர். இதுகுறித்து நடத்திய விசாரணையில் தொழில்நுட்ப கோளாறே இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. எனினும் இந்த தவறுக்கு பயணிகளிடம் மன்னிப்பு கோருவதாக குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்