< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
காய்ச்சல் காரணமாக போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து - வாடிகன் தகவல்
|24 Feb 2024 5:43 PM IST
போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது.
ரோம்,
போப் பிரான்சிஸ்(வயது 87) இன்று லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாடிகன் தேவாலயம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் போப் பிரான்சிஸ் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடந்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதே ஆஸ்பத்திரியில் அவருக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அதேபோல் கடந்த நவம்பர் மாதம் போப் பிரான்சிஸ் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனிடையே அவருக்கு நுறையீரல் சார்ந்த பிரச்சினைகள் எதுவும் இல்லை என மருத்துவ அறிக்கைகள் மூலம் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.