< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
மீனவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசிய போலீசார் - இலங்கையில் அதிர்ச்சி
|6 Oct 2022 3:32 PM IST
இலங்கையில் மீனவர்கள் நடத்திய போராட்டத்தல் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.
கொழும்பு,
இலங்கை நாட்டில் உள்ள முல்லை தீவு பகுதியில் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அங்குள்ள அதிகாரிகள் துணைபோவதாக குற்றச்சாடு எழுந்துள்ளது.
இந்த நிலையில், சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிளை மாற்றக்கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.
இதனால், போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.